கடலில் வீழ்ந்தத ஹெலி : 12 மணிநேரம் நீந்தி கரைசேர்ந்த அமைச்சர்!!

1071


மடகஸ்கார்..மடகஸ்கார் தீவு அருகே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார்.ஆபிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு மடகஸ்கார். மடகஸ்காரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் , 39 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சரக்குகளை ஏற்றிச் செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அதிக பாரம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.