வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம் : பட்டாசு கொளுத்திய இனந்தெரியாத நபர்கள்!!

2255

பீ.பீ.மானவடுவ..

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரது விடுதி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் செயற்பட்டு வந்த பீ.பீ.மானவடுவவிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேவை கருதிய அவசர இடமாற்றமாக குறித்த இடமாற்றம் இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.


இந்நிலையில் அவரது விடுதி முன்பாக இரவு இனந்தெரியாத நபர்களால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அவரது விடுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.