2 ஆவதும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயத்தில் கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

1032


தெலங்கானா..தெலங்கானா மாநிலம், என்.டி.ஆர் நகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார்.இதையடுத்து இரண்டாவதாகவும் பெண்குழந்தை பிறக்கப்போகிறது என ரம்யாவிடம் உறவினர்கள் கூறிவந்துள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
ஆனால் உறவினர்கள் இப்படிக் கூறியதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசவத்திற்கான மருத்துவர்கள் கூறிய தேதியும் நெருங்க நெருங்க அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்குமோ என்று பயம் தொற்றிக்கொண்டுள்ளது.


இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் அவரது வயிற்றில் ஆண் குழந்தை இருந்ததை அறிந்து அவரின் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.