வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி திருட்டு : சந்தேகநபர் கைது!!

1683


துவிச்சக்கரவண்டி திருட்டு..வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று முன்தினம் (11.01) காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் களவாடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வீ காணோளி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டியினையும் கைப்பற்றியுள்ளனர்.


மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மற்றும் துவிச்சக்கரவண்டியினை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.