கனடாவில் மாயமான 16 வயது சிறுமி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

522

16 வயது சிறுமி..

கனடாவில் காணாமல்போன 16 வயதான பாடசாலை மாணவி குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கனடாவில் – சமந்தா வால்டிஸ் ஆல்வரிஸ் என்ற 16 வயது சிறுமியொருவர் காணாமல்போயுள்ளார்.

குறித்த சிறுமியின் கடைசியாக பள்ளி சீருடையுடன் கடந்த 15ஆம் திகதி காலை 8.30 மணியளவில் காணப்பட்டுள்ளார். இவர் 110 முதல் 155 பவுண்டுகள் வரை உடல் எடை கொண்டவராகவும், மெல்லிய உடலமைப்பு கொண்டவர் அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட, கறுப்பு முடியுடன், ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் கொண்டவர் சமந்தா என பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமி குறித்து யாருக்கேனும் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.