வீதி விளக்குகளுக்கு பதில் ஒளிரும் சாலைகள்!!

330

நெதர்லாந்தில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக ஒளிரும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டர்மாமில் உள்ள 100 கி.மீ சாலையில் வீதி விளக்குகள் இல்லை.

எனவே இதற்கு பதிலாக பகலில் சூரிய ஒளியை கிரகித்து, இரவில் பச்சை நிற ஒளியை பிரதிபலிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டோ லூமினைசிங் என்ற ரசாயன பவுடர் கலந்த பெயின்ட் சாலையில் பூசப்பட்டுள்ளது, இருட்டில் தொடர்ந்து எட்டு மணி நேரம் வரை ஒளிரும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையை உருவாக்கிய வல்லுனர்கள் கூறுகையில், கடலில் காணப்படும் ஜெல்லி மீன்களில் எவ்வித சோலார் அமைப்புகளும் இல்லை, ஆனால் அவை இருட்டில் ஒளிர்கின்றன. இதனை மையமாக வைத்தே இச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மின் செலவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகுந்த பயனளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீதி விளக்குகளுக்கு மாற்றாக இந்த புதிய தொழில்நுட்பம் சோதனை முறையில் கடந்த வாரம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

R2 R1