25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

712


பல்லவி டே..இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு வங்கத்தில் ‘Mon Mane Na’ என்ற தொடரில் நடித்து வந்தவர் பல்லவி டே(25). இவர் சில டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பல்லவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லவியின் உடலில் காயங்கள் குறித்த அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ‘Mon Mane Na’ தொடரில் நடிக்கும் பல்லவியின் சக நடிகரான அனமித்ரா படாபயல், இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், ‘நான் முழு அதிர்ச்சியில் இருக்கிறேன்.


நாங்கள் மே 12 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக படமெடுத்தோம், பின்னர் அவளுடன் அரட்டையடித்தோம். இந்தச் செய்தியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்த பல்லவி டேயின் திடீர் இறப்பு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரம் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.