மூழ்கிய கப்பலில் இருந்து மாணவர்கள் அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்திகள்!!

294

The salvage operation continues for the South Korean ferry

447 பயணிகளுடன் நீரில் மூழ்கிய கொரிய கப்பலில் இருந்த மாணவர்கள் தங்களது கடைசி நிமிடங்களில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய உருக்கமான எஸ்.எம்.எஸ்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் தென்கொரியாவின் செவோல் என்ற பயணிகள் கப்பல், 300 மாணவர்கள் உட்பட 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு சென்றது.

அதில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேர் இருந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக நேற்று காலை அந்த கப்பல் கடலுக்குள் மூழ்க தொடங்கியது.

இதில் 10 இற்கும் அதிகமானோர் பலியானதாகக் கூறப்படுகிறது. கப்பலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 291 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கப்பல் கடலுக்குள் மூழ்கியபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் பெற்றோருக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி உள்ளனர். தற்போது அந்த உருக்கமான தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கப்பலில் பயணம் செய்தவர்களில் ஷின் என்ற மாணவனும் ஒருவன். அவன் கப்பல் மூழ்கத் தொடங்கியதும் தனது தாய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளான்.

அதில், ‘இதனை நான் அனுப்புகிறேன். மீண்டும் இதனை நான் கூற முடியாமல் போகலாம். அம்மா, நான் உன்னை நேசிக்கிறேன்´ எனத் தெரிவித்துள்ளான்.

கப்பல் மூழ்கும் நிலையறியாத அந்தத் தாய், ‘ஓ நானும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்´ என மகனுக்கு பதில் அளித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட 179 பேரில் ஷின்னும் ஒருவன்.

அதேபோல், கிம் வூங்-கி என்ற 16 வயது மாணவன் தனது சகோதரனுக்கு அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ் இல் ‘எனது அறை 45 டிகிரியாக உள்ளது. எனது மொபைல் போன் சரியாக வேலை செய்யவில்லை´ எனத் தெரிவித்துள்ளான்.

அதற்கு அவனது சகோதரன் அனுப்பிய பதிலில், ‘உதவிக்கு தேவையான விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனவே பயப்பட வேண்டாம். எனவே, வழக்கம்போல் உனது பணிகளை செய்து கொண்டிரு´ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு கிம்மிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லையாம். காணாமல் போன 287 பேரில் கிம்மும் ஒருவன் எனச் சொல்லப்படுகிறது.

மேலும், கப்பலில் இருந்த ஷின் என்ற 18 வயது மாணவி தனது தந்தைக்கு அனுப்பிய செய்தியில், ‘டாடி, கவலைப்படாதீர்கள். நான் உயிர் காக்கும் உடையினை அணிந்து கொண்டிருக்கிறேன். மற்ற மாணவிகளுடன் தான் இருக்கிறேன். நாங்கள் கப்பலுக்குள் இருக்கிறோம்´ என அனுப்பியுள்ளார்.

மகளின் இத்தகவலால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, ‘உடனடியாக வெளியே வர முயற்சி செய்´ என பதில் அனுப்பியுள்ளார். ஆனால், அம்மாணவி, ‘டாடி, என்னால் முடியவில்லை. கப்பல் கூட்டமாக உள்ளது. ஹால்வே அதிக கூட்டமாக காணப்படுகிறது´ என தனது இறுதி செய்தியில் தெரிவித்துள்ளார்.

கப்பல் மூழ்கும் தகவலறிந்த சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போன் செய்துள்ளனர். அதில் ஒரு மாணவி தன் தாயிடம் பேசும் போது, ‘அம்மா கப்பல் மூழ்குகிறது. என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை´ எனக் கதறியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எனக்கு இன்னும் உயிர் காக்கும் ஆடை கூட கிடைக்கவில்லை என அம்மாணவி கூறிக் கொண்டு இருந்த போதே அவரது போன் அணைந்து விட்டதாக கண்ணீருடன் அம்மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5