லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு!!

806


எரிவாயு சிலிண்டர்கள்..நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.லிட்ரோ நிறுவனம் இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியிருந்தது. இந்த நிலையில் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசைகளில் நிற்க வேண்டாம் என நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் மிக் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.