வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்பு!!

1786


புளியங்குளம் பகுதியில்..சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் வவுனியா – புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை இன்றையதினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.