எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

779


எரிவாயு விலை அதிகரிப்பு..லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனொன்றின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என கூறியுள்ளார்.  எரிவாயுவை ஏற்றிய கப்பலில் சுமார் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.


கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.