வவுனியாவில் பிரதேச சபை ஊழியர்களுக்கு அனர்த்தம் மற்றும் முதலுதவி தொடர்பில் பயிற்சிப் பாசறை!!

661


பயிற்சிப் பாசறை..வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊழியர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஒழுங்கமைப்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரனையில் அனர்த்தம் மற்றும் முதலுதவி தொடர்பில் பயிற்சி பாசறை இடம்பெற்றது.குறித்த பயிற்சி பாசறை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (20.06.2022) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.
இதன் போது அனர்த்தத்தின் போதான பாதுகாப்பு, கண்ணீர்புகை தாக்குதலிருந்து பாதுகாத்துக்கொள்ளல், முதலுதவி எவ்வாறு மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 30க்கு பிரதேசசபை ஊழியர்கள் பங்குபற்றி பயனடைந்திருந்தனர்.