மெயில் மூலம் நடக்கும் ஒன்லைன் மோசடி: சிக்காமல் இருக்க இப்படி செய்யுங்கள்!!

994


மின்னஞ்சலில்..தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எந்தளவுக்கு தொழில்நுட்பத்தால் நல்லது நடக்கிறதோ அதே அளவில் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.குறிப்பாக குறிப்பாக மின்னஞ்சல் மூலமாக நடந்தப்படும் ஓன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு அதிகம் நடக்கும் ஒரு மோசடியை காண்போம்.
ஒரு குறிப்பிட்ட யூஸருக்கு அவரது Gmail, Yahoo, Outlook ஆகிய ஏதாவது ஒரு தளத்தில் இருந்து மெயில் ஒன்று அனுப்பப்படும், அதில் DHL மூலமாக உங்களுக்கு ஒரு டெலிவரி வந்துள்ளதாகவும், அதனை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையை செலுத்தும் படியும் கோரிக்கை வைக்கப்படும்.


இது உண்மையானது தானா என்பதை கண்டுபிடிப்பது சற்றே கடினமானது என்பதால், ஆன்லைன் குறித்து அதிகம் அறிந்திருக்காத நபர்கள் எளிதில் பணத்தை அனுப்பிவிடுவார்கள். இந்த மோசடியை கண்டறிவது கடினமானது.

இப்படிப்பட்ட மெயில் மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? உங்களுக்கு டெலிவரி சம்பந்தமாக ஏதாவது மின்னஞ்சல் வந்தால், அதன் இணைப்பு URL ஐ சரிபார்க்கவும், அதில் DHL க்கு பதிலாக BHL என்றிருக்கும்.


நீங்கள் இணையதளத்திற்குச் சென்றவுடன் அதே எழுத்துப்பிழையையும் காணலாம். மேலும் DHL நிறுவனத்தின் போட்டி நிறுவனமான UPS நிறுவனத்தின் லோகோ உள்ளே இருப்பதைக் கண்டால் நிச்சயம் அது போலி மின்னஞ்சல் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
எந்தவொரு டெலிவரி சேவையும் வாடிக்கையாளரை நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்தும்படி வலியுறுத்துவது இல்லை, எனவே உங்களிடம் ஏதேனும் கட்டணம் கேட்கப்பட்டால், இது நிச்சயமாக ஒரு மோசடி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் பணம் செலுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்