வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அதிகாரியால் மீட்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

525

siruvan

வவுனியா பூங்கா வீதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக திரிவது இனங்காணப்பட்டு வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (26) அவனது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் தந்தை இறந்துவிட்டார். தாய் வேறு ஒரு வேலை நிமிர்த்தம் கொழும்பு சென்றுள்ளார்.

நாய் பிரியம் கொண்ட குறித்த மூன்று வயது சிறுவன் தனது சகோதரியுடன் இருந்த போது, நாய் ஒன்றை திரத்தி கொண்டு சென்றுள்ள நிலையிலேயே வீட்டிற்கு செல்ல வழி தெரியாது வீதியில் நின்று அல்லல் பட்டுள்ளான்.

இந் நிலையிலேயே மீட்கப்பட்ட சிறுவனை தேடியலைந்த உறவினரை இனங்கண்டு குறித்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இச்செய்தியினை உடன் பிரசுரித்து உதவிய அனைத்து ஊடகங்களுக்கும், முகநூல் பாவனையாளர்களுக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.

– See more at: http://www.athirady.com/tamil-news/news/249654.html#sthash.0yd3EUpa.dpuf