மகாஓயா பிரதேசத்தில் அரலங்வில வீதியில் மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பொலிஸ், இராணுவம், விமானப் படை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தீ காரணமாக அழிவடைந்த நிலப்பரப்பு தொடர்பில் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பதுளை நகரப்பகுதியிலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பதுளை மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.