சீப்பு கொண்டு சீவினாலும் அடங்காத தலைமுடி : அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி!!

1474

இங்கிலாந்தில்..

சிறுமி ஒருவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை சீவ முடியாமல் இருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்குத் தலை முடி குறைபாடு இருக்கிறது. இதனால் இந்த சிறுமியின் தலை முடியை சீவ முடியாதாம்.

இந்த அரிய வகை நோயின் பெயர் Uncombable hair syndrome என்ற குறைபாடு எனக்கூறியுள்ளனர். அந்த சிறுமியின் தலைமுடி முடி பொன்னிறமாக ராக் ஸ்டார் போல எழுந்து நிற்கின்றன.

மேலும், உலகின் நூறு குழந்தைகளில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை இது முடி தண்டுகளின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மரபணுக்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அச்சிறுமியின் தாய், அவளுக்குத் தலை முடி தொடர்பான குறைபாடு இருந்தாலும், மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாள். நாங்கள் லைலாவை அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் செல்லும் போது, இவளை பார்க்கும் மக்கள் போரிஸ் ஜான்சன் போல் இருப்பதாகக் கூறுவார்கள்.

மேலும், சில நேரங்களில் அவள் தலை முடி ஐன்ஸ்டீன் போல இருக்கும் , லைலாவுக்கும் இந்த தோற்றம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது இச்சிறுமியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.