நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவைலைக்கிடம்..!

431

20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன் மண்டேலா நலமடைய வேண்டும் என அந்நாட்டு சிறுவர்கள், மக்கள், தலைவர்கள் என அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் அருகிலேயே 24 மணிநேரமும் உள்ளனர்.

மண்டேலாவின் செயற்கை சுவாசதை நிறுத்துவதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமா இன்று மொசாம்பிக் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நேற்று இரவு ஜூமா, மண்டேலாவை காண வந்தார். அப்போதும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.

94 வயதான மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ஆ் திகதி பிரிட்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உறுப்புகளின் இயக்கம் படிப்படியாக குறைவதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.

இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.