மாணவி இறப்புக்கு இதுதான் காரணம் : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

676

சென்னையில்..

சென்னை, திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி , விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தின் , மேல் தளத்தில், கல்லூரியும், கீழ் தளத்தில், விடுதியும் உள்ளது. இந்த கல்லூரியில், ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி , விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த மாணவி, கடந்த 30 ஆம் தேதி விடுதியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு விசாரணை அதிகாரி பகிர்ந்துள்ள தகவல் மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை விவரித்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி சுமதி 5 மாதமாக விடுதி கட்டணத்தை கட்டவில்லை என சொல்லபடுகிறது. அதை கட்டசொல்லி விடுதி நிர்வாகம் மாணவிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் மாணவி தனது அப்பாவுக்கு போன் செய்து, விடுதி கட்டணம் செலுத்த பணம் அனுப்பி வையுங்கள் என கேட்டுள்ளார்.

அப்போது, இனி நீ விடுதியில் தங்க வேண்டாம், வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வா என கூறியுள்ளனர். ஆனால், பாக்கி கட்டணததை செலுத்தாமல், விடுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக இருந்துள்ளது.

இதனால் மாணவி மேலும் மன உளைச்சல் அடைந்துள்ளார். அதன் பின்னர் மாணவியின் அப்பா மகளின் கூகுல் பே எண்ணிற்கு 8 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதை வைத்து மாணவி கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால், விடுதி கட்டணம் பாக்கி இருந்ததால், அதையும் கட்டசொல்லி நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது. பின்னர் மீண்டும் மகளின் எண்ணிற்கு 30 ஆம் தேதி அன்று 4 ரூபாய் அனுப்பியுள்ளார்.

அதை கட்டியதும் மாலை வீட்டிற்கு வந்துவிடுவேன் என மாணவி தந்தையிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.அதன் பின்னர் சுமதி வீட்டிற்கு செல்லவில்லை. சந்தேகமடைந்த தந்தை சுமதிக்கு போன் போட்டுள்ளார். ஆனால், மாணவி போனை எடுக்கவில்லை.

பின்னர் மாணவியின் தோழிக்கு போன் செய்த பிறகுதான் மகள் தற்கொலை செய்துகொண்டது தெரிந்துள்ளது.  இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த தோழிகளிடமும் சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது.