வவுனியாவில் குறைவடைந்துள்ள எரிபொருள் வரிசை : எரிபொருள் மாஃபியா முடிவிற்கு வருகின்றதா?

1264


எரிபொருள் வரிசை..எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய ரீதியிலான எரிபொருள் அட்டை (QR) முறைமை வவுனியாவில் வெற்றியடைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகளும் குறைவடைந்துள்ளன.நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக எரிசக்தி அமைச்சினால் தேசிய ரீதியிலான எரிபொருள் அட்டை (கியூஆர்) கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுவதானால் குறிப்பிட்ட வாகனம் வாரத்தில் ஒரு தடவை மாத்திரமே எரிபொருளை பெற்றுச் செல்லக் கூடியதாகவுள்ளது.


இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கடந்த மாதம் வரை நாட்கணக்கில் காணப்பட்ட நீண்ட வரிசை தற்போது குறைவடைந்துள்ளதுடன், ஒரு சில மணித்தியாலயத்தில் இலகுவாக எரிபொருள் பெறக் கூடிய நிலமையும் உருவாகியுள்ளது.

இதன் மூலம் எரிபொருள் மாஃபியாக்களின் நடவடிக்கை ஓரளவு முடிவிற்கு வந்துள்ளதுடன் தமது தேவைக்காக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சாதாரண மக்கள் இலகுவாக எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.