வவுனியாவில் “மக்கள் சேவைக்கு உதவாது விட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள்” என போராட்டம்!!

938


போராட்டம்..வடமாகாண இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பிரதேச செயலங்களில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் (08.08) காலை 9.00 மணியளவில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த முப்பதாம் திகதி (30.07.2022) இரவு பொலிஸாரின் இந்த பழிவாங்கும் செயற்பாட்டை கண்டித்தே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலக நடவடிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்தவருக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்,


இக்கட்டான சூழலிலும் இடையறாது பணியாற்றியவரை கேவலப்படுத்துவதா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்த்தில் ஈடுபட்டிருந்தனர்.