வவுனியாவில் ”வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” என தெரிவித்து போராட்டம்!!

474


போராட்டம்..இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என தெரிவித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (08.08) காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே தான் கேட்கின்றோம்,
எங்கள் பூர்வீக காணி அனைத்தையும் விடுவி, கௌரவமான உரிமைகளுக்கான மக்கள் குரல், பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 70க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.