ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

435

இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படையால் மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை ஜூன் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.