வவுனியா நகரசபை விரைவில் மாநகரசபையாக தரமுயர்த்தப்படுகின்றது!!

599


வவுனியா நகரசபை..ஏழு நகர சபைகளை, மாநகர சபைகளாகவும், மூன்று பிரதேச சபைகளை , நகர சபைகளாகவும் தரம் உயர்த்த பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி வவுனியா, திருகோணமலை, மன்னார், புத்தளம், களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய நகர சபைகள், மாநகர சபைகளாக தரமுயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனறாகல ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரம் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மற்றும் பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.