“விவாகரத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்”.. வீடியோ வெளியிட்ட பெண் : முன்னாள் கணவர் செய்த கொடூரம்!!

1163


அமெரிக்காவில்..விவாகரத்து பெற்றபிறகு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட தனது முன்னாள் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர். இது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.அமெரிக்காவில் வசித்துவந்தவர் சானியா கான். இவர் அமெரிக்காவில் வசித்துவந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹீல் அகமது என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருக்கிறார்.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் சானியா வசித்துவந்தார். இவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், பின்னர் டேட்டிங்-ல் இருந்திருக்கின்றனர். இப்படி 5 வருட டேட்டிங்கிற்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு சானியா – ரஹீல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சிகாகோவிற்கு குடியேறியுள்ளார் ரஹீல்.


இருப்பினும் சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து சானியா சிகாகோவிலேயே வசிக்க, ரஹீல் ஜார்ஜியாவில் குடியேறியிருக்கிறார்.

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் எப்போதும் துடிப்புடன் இயங்கிவரும் சானியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திருமண வாழ்க்கையால் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் குறித்து பேசிய சானியா, விவாகரத்துக்கு பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


இந்த வீடியோவை ரஹீல் பார்த்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஜார்ஜியாவில் இருந்து 1100 கிலோமீட்டர் காரில் பயணித்து சிகாகோவிற்கு வந்திருக்கிறார் ரஹீல். சானியாவின் வீட்டுக்கு சென்ற ரஹீல் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் சானியாவை கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் ரஹீல் மாய்த்துக்கொண்டிருக்கிறார். பலத்த சத்தம் கேட்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் அங்கிருந்த சானியா, ரஹீலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.