வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : களத்தில் மூன்று குழுக்கள்!!

1665


போக்குவரத்து பொலிஸார்..வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் இன்று (11.08.2022) மாலை திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர தலைமையில் மூன்று போக்குவரத்து பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டு வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இதன் போது வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், தலைக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 3 சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.