40 ஆண்டுகள் கடந்தும் வியட்நாமில் தொடரும் அவலநிலை!!(படங்கள்)

356

வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் கொடூரமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

வியட்நாமில் போர் முடிந்து 40 ஆண்கள் கடந்து விட்ட நிலையிலும், போரில் உபயோகப்படுத்தப்பட்ட , இரசாயன ஆயும் “ஏஜெண்ட் ஆரஞ்சின்” காரணமாக அங்கு பிறக்கும் குழந்தைகள், கொடூரமான குறைப்பாட்டுடன், பிறக்கின்றனர்.

இந்த இரசாயன ஆயுத “ஏஜெண்ட் ஆரஞ்சின்” என்ற இரசாயனப் பொருள், பயிர்கள் மீதும், தாவரங்கள் மீதும், மரங்கள் மீதும், ஒழிந்திருக்கும் கொரில்லா போராளிகளை கொல்லும் நோக்கத்தில் அமெரிக்க இராணுவத்தினரால் உபயோகப்படுத்தப்பட்டது.

இதில் உள்ள DIOXI என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள் குழந்தைகள் பிறக்கும் பொழுது, அங்கவீனமாக பிறக்கின்றது. புற்றுநோய் மற்றும் கொடூரமான குறைபாடுகளுடன், கொண்ட குழந்தைகளாக பிறந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை பிரிட்டிஷ் புகைப்படக்காரர் ஒருவர் வியட்நாமிற்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

இதனை காணும்போது என்னுடைய வயிறு கலங்குகிறது, இவர்கள் அநாதை விடுதிகளில் சேர்க்கப்பட்டு, இவர்களின் மனநலம், பொரும்பாலும் பாதிக்கப்பட்டு, 17 வயதுவரை விடுதியின் மருத்துவமனையிலேயே வாழ்கின்றனர்.

பிறகு உயிர் பிழைக்கும் அநாதைகள் 17 வயதிற்குப் பிறகு பெரியவர்களின் காப்பகங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த அநாதை ஆசிரமங்களையும், மருத்துவமனைகளையும், பன்நாட்டு தொண்டு நிறுவனங்கள் தங்களது நிதி உதவியால் தாங்கி வருகின்றன.

வியட்நாம் அரசாங்கமும், இந்த அநாதை விடுதிகளுக்கு நேரடியாக நிதியுதவிகளை செய்கின்றது. இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்த “ஏஜெண்ட் ஆரஞ்சின்” இரசாயன நச்சினால் பாதிக்ககப்பட்டவர்கள், அவர்களும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றனர். வியட்நாமில் இந்த அவல நிலை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

1 2 3 4 5 6