வடகொரியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!!

286

President Barack Obama gestures while speaking in San Jose, Calif. , Friday, June 7, 2013. The president defended his government's secret surveillance, saying Congress has repeatedly authorized the collection of America's phone records and U.S. internet use. (AP Photo/Evan Vucci)

தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, ஏற்கனவே கடந்த 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடத்தியது. மேலும் அடிக்கடி அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.

இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் அந்நாடு, மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து தென்கொரிய ராணுவ அதிகாரி கூறும்போது, ஏற்கனவே அணு ஆயுத சோதனை நடத்திய பங்க்யேரி பகுதியில் மீண்டும் ஒரு சோதனைக்கு வடகொரிய வீரர்கள் தயாராகி வருவதாகவும், அந்நாட்டு தலைமை உத்தரவிட்டவுடன், எந்த நேரத்திலும் இந்த சோதனை நடைபெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வடகொரியா, அணு ஆயுத சோதனை மேற்கொண்டால், அந்நாடு சர்வதேச விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.