வவுனியா நகரில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் திறப்பு!!

1314

பண்டார வன்னியன்..

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் இன்று (25.08.2022) நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியன், முல்லைத்தீவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட கோட்டையைத் தகர்த்து வெற்றி கொண்ட நாளின் 219ஆவது ஆண்டு நினைவு தினத்தை, வவுனியா நகரசபையும் விழாக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது பண்டாரவன்னியன் சிலையுள்ள பகுதி தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் என பெயர்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலையும் அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அமைப்புக்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மற்றும் பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.