வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாணவிகள் வரலாற்று சாதனை!!

927


இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை..வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக கலைப்பிரிவில் மாணவி ஜெ.ஜானுசா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5ம் இடத்தினையும்,வர்த்தகப் பிரிவில் மாணவி கே.துஷ்யந்தி A,2B சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் 34வது இடத்தினையும் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலையில் வர்த்தக பிரிவில் மாணவர்கள் 100% சித்தியடைந்துள்ளதுடன் பல மாணவர்கள் திறமைச்சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.