கஞ்சாவினால் உயிர் பிழைத்த சிறுமி!!

333

Kancha

கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது.

இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது 8 வயதுடைய ஊனமுற்ற மகள் மியாவின் தன்னை அம்மா அம்மா என்ற கூப்பிடும் சத்தம் கேட்டதும் தாய் சாரா வில்கின்சன் ஆச்சரியமடைந்துள்ளார்.

இந்த பெண் பிள்ளை பிறந்து 29 நிமிடங்களில் முதலாவது வலிப்பு ஏற்பட்டதாக அவரது தாய் கூறியுள்ளார். இந்த நோய் தானாகவே குணமாகுமென பெற்றோர் எண்ணியிருந்தனர். ஆனால் அதனை குணமாக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

மியா பிறக்கும் போதே அசாதாரண தன்மையான மூளையுடன் பிறந்ததால் இத்தகைய மிகவும் அரிதான வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயினால் பாதிக்கப் படுபவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே மரணமடைந்து விடுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

மியா போன்று நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பவர்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்நோக்குவர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக மோசமான வலிப்பு வரும்போது 22 மணித்தியாலங்கள் வரை அது நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த யூலை மாதம் மீண்டுமொரு கொடூரமான வலிப்பு ஏற்பட்ட போது மருத்துவரீதியாக தூண்டப்படும் கோமா நிலைக்கு மியா உள்ளாகினார். அப்போது தமது பிள்ளை கைவிட வேண்டியதுதான் என பெற்றோரும் நினைத்துள்ளனர்.

இதே நிலை மீண்டும் ஒரு முறை ஏற்பட்டுள்ளது. அவளுடைய உடல்நிலை இவ்வளவு மோசமாக இருந்த போதிலும் மியா எப்போதும் சந்தோசமாகவும் பொம்மைகளுடன் விளையாடியபடியும் இருப்பாள் என தாயார் கூறுகின்றார்.

நரம்பியல் மருத்துவ வல்லுனர் தம்மால் எதுவும் செய்ய முடியாதென கூறிவிட்டனர்.

இந்த நிலையில் கஞ்சாவினால் வலிப்பு நோயை குணப்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. ஆனால் அது மிக இளவயதினருக்கு உகந்ததல்ல. எந்த ஒரு மருந்திற்கும் பலனளிக்காது மியாவின் நிலைமை மிக மோசமாகிகொண்டே போனதனால் கஞ்சாவே எஞ்சியிருக்கும் மருந்து என பெற்றோர் நம்பினர்.

எனினும் குழந்தைபருவ நோயாளிக்கு மருத்துவர்கள் கஞ்சாவை பரிந்துரைக்க மாட்டார்கள். குழந்தை ஒன்று கஞ்சாவை புகைப்பது என்பது உண்மைக்கு அப்பாற்பட்டது. இதனால் அதனை சமைத்து பின்னர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பிள்ளைக்கு கொடுத்தனர்.

முதல் முறையாக கஞ்சாவை மியா சாப்பிட்டு ஒரு நாள் முடிந்ததும் கடுமையான மாற்றங்கள் தெரிந்ததாக கூறப்படுகின்றது.

24 மணித்தியாலங்களில் வலிப்பு நின்றுவிட்டது என மியாவின் தந்தையான வில்கின்சன் கூறியுள்ளார். மூளை மின்னலைவரவு பரிட்சை மூலம் மூலிகை பொங்கிஎழும் மூளையை அமைதிப்படுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய ஒரு சம்பவம் முன்னொரு போதும் நடக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த கஞ்சா அதிசயமான ஒரு புதிராக உள்ளது. இதனால் தீர்க்கமுடியாத வலிப்பு நோய் குறைபாடுகளால் துன்புறும் நூற்றுக்கணக்கான குழந்தைகளையும் இதன் மூலம் குணப்படுத்தலாமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.