வவுனியாவில் 156வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

356


பொலிஸ் வீரர்கள் தினம்..வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே நேற்று (03.09.2022) காலை 7.40 மணிக்கு உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 156வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி எதிரிசிங்க,
பொறுப்பதிகாரிகள், பொலிஸார், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், மாவட்ட பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்திமையுடன் தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்பட்டதுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே உரையாற்றினார்.

அத்துடன் இறுதியில் உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.