பசியில் உணவு ஓடர் செய்த இளைஞன்… பார்சலை திறந்து பாத்ததும் காத்திருந்த அதிர்ச்சி!!

576

டெலிவரியில்..

இன்றைய காலத்தில் நம்மில் பலரும் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். நேராக உணவகத்திற்கு சென்று உணவு அருந்தும் நேரத்தை விட, நமது வீட்டில் இருந்தபடியே உணவு வகைகளை பார்த்து ஆர்டர் செய்து உண்ணுவதால் நமது நேரமும் மிச்சமாகிறது.

இதன் காரணமாக பலரும் வீட்டிலிருந்து உணவை ஆர்டர் செய்வதையே பெரும்பாலும் விரும்பி வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் டெலிவரி செய்த ஒரு நபருக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Damien Sanders என்ற நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் Chicken Wings, Fries உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, Damien ஆர்டர் செய்த உணவும் வீடு தேடி வந்துள்ளது.

ஆனால், பார்சலை திறந்து பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இதற்கு காரணம், சிக்கன் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் எலும்புகள் மட்டுமே இருந்துள்ளது. மேலும், Fries டப்பா காலியாகவும் இருந்துள்ளது.

அத்துடன் டேமினுக்கு வந்த பார்சலில் ஒரு கடிதமும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. டேமினுக்கு உணவு டெலிவரி செய்த நபர் தான் அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “என்னை மன்னிக்கவும். நான் உங்கள் உணவை சாப்பிட்டு விட்டேன். நான் மிகவும் பசியில் இருந்தேன். எனக்காக நீங்கள் பணம் செலுத்தியதாக கருதி கொள்ளுங்கள். இந்த வேலையை நான் விடப் போகிறேன்” என அந்த கடிதத்தில் டெலிவரி ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டேமின். மேலும், அந்த டெலிவரி ஊழியர் பற்றியும் சில கருத்துக்களை அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், ஒரு சிலர் இந்த வீடியோவை டேமினே உருவாக்கி இருக்கலாம் என குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் சிலர், டெலிவரி ஊழியர் குறித்தும், டேமினுக்கு நடந்த செயல் குறித்தும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.