மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்த நபர் யார்? வியக்க வைத்த காரணம்!!

617


கென்யாவில்..15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது.
இதில் மட்டும் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார்.


மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.


டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.