பல நாட்கள் ஏக்கம்.. பெண் தேடி போலீஸ் நிலையம் வரை கோரிக்கை விடுத்த இளைஞர் : கடைசியில் சிறப்பாக நடந்த திருமணம்!!

1013

உத்தரபிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி. இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தனது பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாக அசீம் மன்சூரி பிறந்துள்ள நிலையில், இவரது உயரம் 2.3 அடி மட்டுமே உள்ளது.

இந்த உயரத்தின் காரணமாக இளம் வயதில் இருந்தே ஏராளமான கேலி, கிண்டலுக்கும் அசீம் ஆளாகி உள்ளதாக தெரிகிறது. முன்னதாக பள்ளி பருவத்தில் தனக்கு நேர்ந்த கேலியின் காரணமாக பள்ளி படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, சகோதரர்கள் நடத்திய அழகு நிறுவன கடையில் அசீம் மன்சூரி பணிபுரிந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தொடர்ந்து தனியாக கடை ஒன்றையும் நடத்தி தொழில் செய்து வருகிறார்.

மேலும் தனது தொழிலிலும் அசீம் சிறந்து விளங்கி வந்துள்ளார். ஆனால், கை நிறைய பணம் சம்பாதித்தாலும் ஒரே ஒரு ஏக்கம் மட்டும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

நன்கு பணம் சம்பாதித்த பிறகும் தான் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லையே என ஏங்கி வந்துள்ளார் மன்சூரி. இதற்காக பல இடங்களிலும் அவர் பெண் தேடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் பார்த்து தாருங்கள் என போலீஸ் நிலையத்திலும் கோரிக்கை ஒன்றை அசீம் மன்சூர் அளித்திருந்த போது அவர் குறித்த செய்தி, அதிகம் வைரலாகி இருந்தது. இது தவிர, முதலமைச்சர்களுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார் மன்சூரி.

இந்த நிலையில், நீண்ட நாள் ஏக்கத்திற்கு பின்னர் அசீம் மன்சூருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. அசீம் ஊருக்கு அருகே உள்ள ஹபூர் எனும் பகுதியை சேர்ந்தவர் புஷாரா.

இவர் சுமார் 2.5 அடிக்கு மேல் உயரமுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த ஆண்டு அசீம் மற்றும் புஷாரா ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமண நிச்சயதார்ததமும் கடந்த ஆண்டு நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

அதே வேளையில், புஷாரா பட்டப்படிப்பு படித்து வந்ததால் ஓராண்டு கழித்து திருமணத்தை நடத்தி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அசீம் மன்சூரி – புஷாரா திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

திருமண கோலத்தில் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வரும் நிலையில் அப்பகுதியில் அசீம் மன்சூரிக்கு திருமணம் நடந்ததை பெரிய அளவில் கொண்டாடி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.