இறந்த தந்தையை உயிர்ப்பிக்க 2 மாத சிசுவை நரபலி கொடுக்க கடத்திய பெண் : குலைநடுங்கிப் போன போலீஸ்!!

421

டெல்லியில்..

கேரள மாநிலத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தலைநகரான டெல்லியில் இறந்து போன தந்தையை உயிர்த்தெழ வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இரண்டு மாத குழந்தையை பெண் ஒருவர் நரபலி கொடுக்க கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கேரள மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக நரபலி அல்லது நரபலி கொடுக்கு முயல்வதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் இறந்து போன தந்தையை உயிர்த்தெழ வைக்க வேண்டும் என்ற மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு இரண்டு மாத குழந்தையை பெண் ஒருவர் நரபலி கொடுக்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் கர்ஹி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாத குழந்தை ஒன்று மாயமானது. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கர்ஹி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வியாழனன்று அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்த போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த குடும்பத்துடன் அறிமுகமாகியுள்ளார். குழந்தையை பரிசோதிப்பதற்காக செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை எடுத்துச் சென்றபோது அந்த இளம் பெண் செவிலியரை தாக்கி குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் டெல்லி கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பதும் நரபலி கொடுப்பதற்காக அந்த குழந்தையை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்வேதாவின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். மூடநம்பிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்வேதா பில்லி சூனியம், நரபலி தொடர்பான புத்தகங்களையும் இணையங்களில் கட்டுரைகளையும் அதிக அளவில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்தால் அதன் மூலம் தனது இறந்து போன தந்தையை மீண்டும் உயிர்த்தெழ வைக்க முடியும் என நம்பி இருக்கிறார்.

இதை அடுத்து திட்டமிட்டு அந்த குழந்தையை கடத்தியதாக கூறி இருக்கிறார். தற்போது நரபலி கொடுப்பதற்கு தயாராகி வந்த நிலையில் தான் ஸ்வேதாவை கைது செய்துள்ள போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்