கோகோ கோலாவிலிருந்து ரசாயன தாவர எண்ணெயை அகற்ற முடிவு!!

358

Cola

உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஒயில்’ அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை மாற்றவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பெண்டா, பவரேட் போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது.

‘பிவிஒ’வை நீக்கும் இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட இரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் ஜோஷ் கோல்ட் என்ற கோகோ கோலா நிறுவனத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோகோ கோலாவின் இந்த முடிவு, நிறுவனங்கள் மீது பொதுமக்களின் அழுத்திற்கு இருக்கும் சக்தியை பிரதிபலிக்கிறது. ‘பிவிஒ’வின் பயன்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பும் ஒரு இணையதள மனுவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.