கணவரை இரவு 9 மணி வரை தொந்தரவு செய்யக்கூடாது… மனைவியிடம் நூதன ஒப்பந்தம் போட்ட கணவரின் நண்பர்கள்!!

484

திருமண நிகழ்வில்..

திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரகு. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வகை வகையான பரிசு பொருட்கள் கொடுக்க, ரகுவின் நெருங்கிய நண்பர்கள் புது விதமாக பரிசுப்பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக தனது நண்பனின் மனைவியிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

அதாவது ரகுவின் திருமணத்தின் போது, அவரது நெருங்கிய நண்பர்கள் குழுவாக சேர்ந்து பாத்திரம் ஒன்றை தயார் செய்துள்ளனர். அந்த பத்திரத்தில் “என் கணவரை இரவு 9 மணி வரை அவரது நண்பர்களுடன் இருப்பதற்கு சம்மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் “போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை படித்த மணப்பெண்ணும் சிரித்தபடியே சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தமானது 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதில் சாட்சிக்கு 2 பேர் கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் திருமணத்தில் நடந்த நிகழ்வை ரகுவின் நண்பர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு – சாந்தி தம்பதியினர் தங்களது திருமணத்திற்கு முன்பு இது போன்று ஒப்பந்தத்தில் மணமக்கள் கையெழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்றவை இருந்தது.

ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.