அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்கு மத்தியில் 170 சுறாக்கள் கொலை!!

393

Shark

மேற்கு அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் சுறா மீன் தாக்கி மனிதர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், அங்கு நூற்று எழுபதுக்கும் அதிகமான சுறா மீன்கள் பிடித்துக் கொல்லப்பட்டுள்ளன. இவ்வாறு சுறா மீன்களை பிடித்துக்கொல்லும் விவகாரம் அங்கு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மூன்று மாத காலகட்டத்தில் அப்பகுதியிலிருந்த பெரிய சுறா மீன்கள் ஐம்பது கொல்லப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மிக அவசியமானது ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு பேர் கிரேட் வயிட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெரிய வகை சுறா மீன்களால் கொல்லப்பட்டிருந்தனர் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகம் பேர் குளிக்கப் பயன்படுத்தும் கடற்கரைப் பகுதிகளில் கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி, இரை கட்டப்பட்ட மிதவைகளை வரிசையாக நிறுத்தி அதில் சிக்கும் சுறா மீன்களை சுட்டுக் கொல்வதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இந்த நடவடிக்கை கடந்த ஜனவரியில் ஆரம்பித்தது முதல் கிரேட் வயிட் வகை சுறா ஒன்றுகூட பிடிபடவில்லை.