யாழில் குழந்தை பிரசவித்த 15 வயதுச் சிறுமி : தந்தைக்கு வயது 18!!

1751


யாழில்..யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பதினைந்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆராய்ந்தபோதே குறித்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதன்போது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி, பிறந்து 12 நாட்களேயான சிசுவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த சிறுமி 18 வயதான இளைஞருடன் குடும்பம் நடத்துவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.