300 நைஜீரிய பாடசாலை மாணவிகள் கடத்தல் : அவுஸ்திரேலிய சிறுமியின் அதிரடி நடவடிக்கை!!

248

Aus

நைஜீரியாவில், பாடசாலை மாணவிகள் 300 பேர் வரை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மாணவியொருவர், கடத்தல் சம்பவம் தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கோரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மேற்கு சிட்னியின் பென்ரித் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெசிந்தா வைன் என்ற 13 வயது சிறுமி, கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு நைஜீரியாவின் மீது அழுத்தம் தொடுக்குமாறு அவுஸதிரேலிய அரசைக் கோரும் ஒன்லைன் மகஜரை ஆரம்பித்துள்ளார்.

போக்கோ ஹராம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் கடந்த 14ஆம் திகதி நைஜீரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் விடுதியை முற்றுகையிட்டு. தூங்கிக் கொண்டிருந்த மாணவிகளை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட சிறுமிகளை அடிமைகள் என்றும் அவர்களை உள்ளுர் சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்கப் போவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் இணையத்தில் வீடியோ ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் உலக நாடுகளின் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறது.