100 ஆண்டுகளாக நிலவி வந்த குழந்தை மம்மியின் குழப்பம் தீர்ந்தது!!

252

Mummy

எகிப்தில் பழமை வாய்ந்த குழந்தை மம்மி ஒன்று போலியானதாக இருக்கலாம் என கருதிய தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையானது என கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட “குழந்தை மம்மி” ஒன்று போலியானது என கூற காரணம், அந்த மம்மியை சுற்றி போர்த்தி வைக்கப்பட்டிருந்த எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் தான்.

இந்த குழப்பம் காரணமாகவே சுமார் 2600 ஆண்டு பழமை வாய்ந்த அந்த 52 செ.மீற்றர் நீளம் கொண்ட”குழந்தை மம்மி” போலி என கருதப்பட்டது.

ஆனால் தற்போது அந்த மம்மியை வல்லுநர்கள் சி.டி.ஸ்கேன் செய்து பார்த்ததில் அது உண்மையானது தான் என கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதன்மூலம் பழங்கால எகிப்தியர்கள் பிறக்காத குழந்தைகளை கூட மம்மிகளாக்கியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எகிப்தை சேர்ந்த வல்லுனரான கரோலின் கிரேவ்ஸ்-பெரௌன் கூறுகையில், பழங்காலங்களில் பெருமளவிலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போனாலும், கருவிலேயே சிதைந்து போனாலும் அதை சாதாரணமாக பார்க்காமல் அவைகளை பாதுகாப்புடன் புதைத்து வைத்துள்ளனர் என்பதை தான் இந்த மம்மி குழந்தை நமக்கு புரிய வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நூறு ஆண்டுகளாக நிலவி வந்த இந்த குழந்தை மம்மியின் குழப்பம் தற்போது தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.