ஒரு பக்கம் கடல்.. மறுபக்கம் உறைந்துபோன பனி : இயற்கை அன்னையின் ஆச்சரியம் : எங்கு தெரியுமா?

698

ஜப்பானில்..

இயற்கை அன்னையின் ஆச்சரியங்களுக்கு எல்லை இல்லை நாங்கள் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை இயற்கை அன்னை எளிதில் இந்த பூமிப் பந்தில் வழங்கிச் செல்கின்றாள்.

அந்த வகையில் இயற்கை அன்னையின் ஓர் கொடையாக ஜப்பானில் அமைந்துள்ள ஓர் கடற்கரையாக ஜப்பானின் கடற்கரையை நாம் குறிப்பிடலாம். பொதுவாக கடற்கரை என்றாலே மணல் பரப்பும் கடல் அலைகளுமே எமக்கு நினைவில் வரும் எனினும் சற்றே வித்தியாசமாக ஜப்பானின் ஒரு கடற்கரை இரண்டு விதமான அனுபவங்களை வழங்குகின்றது.

கடல் அலைகளும் பனிப்படலம் என இருவேறு பூகோள தரைத்தோற்ற மாற்றங்களை இந்த கடற்கரை ஒரே நேரத்தில் கொண்டுள்ளது. இந்த கடற்கரைக்குச் செல்லும் நபர்கள் கடற்கரையில் இருந்து ஒரு புறத்தில் நீரால் சூழப்பட்டு, கடல் அலைகளையும் மறுபுறத்தில் வெள்ளை நிறப் பனி படலத்தையும் கண்டு ரசிக்க முடியும்.

இஷா என்ற புகைப்படக் கலைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஓர் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. ஒரே இடத்தில் கடற்கரையின் ஒரு முனையில் கடலும் மறுமுனையில் பனிப்பாறையும் காணப்படும் அற்புதமான ஒரு காட்சியை தத்ரூபமாக படமெடுத்து பதிவிட்டுள்ளார்.

புகைப்படத்தின் வலது பக்கத்தில் பணி படலமும் இடது பக்கத்தில் கடல் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும் இந்த புகைப்படம் பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படம் பிரபல்யம் அடைந்தாலும் உலகில் இவ்வாறான கடற்கரைகள் வேறு இடங்களிலும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா, மிச்சிகன், ச்செத்தம் போன்ற இடங்களிலும் இவ்வாறான காட்சிகளைக் கொண்ட கடற்பரைகளை நாம் காண முடியும்.

இந்த புகைப்படத்தை பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு சென்று இந்த கடற்கரையை பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.