மனிதர்களை பார்த்தாலே அச்சம்… போர்வைக்குள் ஓடி ஒழியும் தாயும் மகளும் : அதிர்ச்சியில் மக்கள்!!

696

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மணி. மேலும் சூரியபாபு – மணி தம்பதியினருக்கு துர்கா பவானி என்ற மகளும் உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின் தொற்று பரவல் குறைந்ததையடுத்து சூரியபாபு வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பி வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

ஆனால் சூரிய பாபுவின் மனைவி மணி மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த காரியத்திற்கும் பங்கேற்காமலும் அதனை தவிர்த்து வந்துள்ளனர்.

அதே போல, சமீப காலமாக மணி மற்றும் துர்கா ஆகியோரின் நடவடிக்கையில் மாற்றம் உருவாகி உள்ளது. மனிதர்கள் யாரைக் கண்டாலும் போர்வைக்குள் இருவரும் சென்று ஒளிந்து விடுவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயும் முடங்கி கிடந்ததாகவும், மணி மற்றும் துர்கா ஆகிய இருவருக்கும் உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி இருக்கையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இது பற்றி காக்கிநாடா அரசு மருத்துவமனை மற்றும் போலீசாருக்கு சூரியபாபு தகவல் தெரிவிக்க, அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். போலீசார், செவிலியர்கள் உள்ளிட்டோர் வந்ததும் தங்களை கொல்ல ஆட்கள் வருவதாக பயத்தில் போர்வைக்குள் மணி மற்றும் துர்கா ஆகியோர் ஒளிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை மெல்ல மெல்ல பேசி ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து சென்று அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். மணி மற்றும் துர்கா ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்களை பார்ப்பதும் பேசுவதும் இல்லை என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி வந்த நாள் முதல் மாந்த்ரீகம் குறித்து மணி அதிகம் பேசி வந்ததாகவும், அதனை அவரது மகள் துர்காவிற்கும் சொல்லி வளர்த்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

3 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியதுடன் மக்களை பார்ப்பது கூட இல்லாமல், அறையிலேயே முடங்கி கிடக்கும் தாய் மற்றும் மகள் குறித்த விஷயம், அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.