இன்ஸ்டாகிராமில் காதல்… போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!

276

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கனகராஜ் மகள் முத்து மணிமாலா (23) பிபிஏ முடித்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 24ஆம் தேதி கடையநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து உள்ளனர்.

மேலும் இதன் காரணமாக முத்துமணி மாலாவின் பெற்றோர், மாற்று சமுதாயத்தைச் சார்ந்த ஆண் தமது மகளை திருமணம் செய்து கொண்டனர் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதன் விஷயத்தை அறிந்த காதல் ஜோடி, இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் காதலர்களுக்கு இடையே கடித போக்குவரத்தே அதிகபட்ச தகவல் தொடர்பாக இருந்து வந்தது. பின்னர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் பெருக்கம் காரணமாக, தகவல் தொடர்பு மிகவும் எளிதாகவிட்டது.

இதன் விளைவாக உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய வழி காதல்கள் பெருகி, அவை போலீஸ் தஞ்சம் புகும் அளவுக்கு இந்த போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.