ஒரு குழந்தைக்காக போட்டியிடும் மூன்று தந்தைமார்கள்!!

298

Baby

தமிழகத்தின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திருமணம் ஆகாத பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யார் தந்தை என்பதில் 3 பேருக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் திகதி நள்ளிரவு, இளம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தனது பெயர் மலர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் பெயர் துரை என்று மருத்துவ பதிவேட்டில் பெயரை பதிவு செய்திருந்தார். மலரை கவனிப்பதற்கு 70 வயது மூதாட்டி வந்திருந்தார்.

அந்த பெண்ணுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மலருக்கு எச்ஐவி பாதிப்பு தெரியவந்தது. பின்னர் 10ம் திகதி அதிகாலை மலருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

பிறகு 11ம் திகதி குழந்தையின் அப்பா எங்கே என்று தாதி மற்றும் ஊழியர்களும் கேட்டனர். குழந்தையின் தந்தைக்கும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். உடனே, மலர் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்று கூறினார்.

இதனால் திடுக்கிட்ட மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக துளசியை தனி அறையில் வைத்து, அவரையும் குழந்தையையும் பராமரிக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் குழந்தை எனக்குதான் சொந்தம் என்று 3 ஆண்கள் உரிமை கொண்டாடினர். திருமணமே ஆகாத நிலையில் குழந்தை தனக்குதான் உரியது என்று 3 பேரும் மாறி மாறி கூறியதால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதிய மருத்துவமனை டீன் குழந்தையை யாரிடமும் காட்டக்கூடாது. யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

துளசியையும், குழந்தையையும் மருத்துவமனையை விட்டு டிஸ்ஜார்ஜ் செய்யும் வரை பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த துளசி, குழந்தையை யாராவது கேட்டால் அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

அதற்கு மருத்துவ அதிகாரிகள் யாரிடமும் கொடுக்கமாட்டோம். மருத்துவமனை நிர்வாகம் இது பற்றி முடிவு செய்யும் என்று கூறிவிட்டனர். டீன் ராமகிருஷ்ணன் ஷெனாய் நகரில் உள்ள இந்திய குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த அதிகாரிகள் விரைந்து வந்து துளசியையும், அவரது குழந்தையையும் நாங்களே பராமரித்துக்கொள்கிறோம். டிஸ்சார்ஜ் ஆன தகவலை எங்களுக்கு தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.