வவுனியாவில் வீதி விபத்துக்களை குறைக்க பொலிசார் விசேட நடவடிக்கை!!

408


பொலிசார் விசேட நடவடிக்கை..வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக இன்று (31.12.2022) வவுனியா பொலிசாரினால் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.விபத்துக்களை குறைக்கும் முகமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இச்செயற்பாட்டின் போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.


வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.