வவுனியா ஊடான வடக்கிற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் நாளைமுதல் இடை நிறுத்தம்!!

705

புகையிரத சேவைகள்..

கொழும்புக்கும் யாழ்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவை (ஜன 05) முதல் எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. பயணிகள் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மேலதிகமாக 33 அரச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

புகையிரத பாதை மீள்புனரைமைப்பின் முதல் கட்டமாக ஐந்து மாத காலத்திற்கு கொழும்புக்கும்,யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது. அதேவேளை புகையிரத சேவையாளர்கள் 500 பேர் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதால் புகையிரத சேவை தற்போது ஆளணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.