வவுனியாவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு!! 

637


தங்க நகைகள் திருட்டு..வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு புகுந்து ஐந்தரைப்பவுண் தங்க நகைகள் திருடிச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வவுனியா திருநாவற்குளம் முதலாம் ஒழுங்கையில் கடந்த 3ஆம் திகதி தனிப்பட்ட விடயமாக வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றவேளையில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் மூன்று பவுண் இரண்டு தங்கச் சங்கிலி, இரண்டரைப்பவுண் காப்பு என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்.
ஒன்பது இலட்சத்தி எழுபத்தையாயிரம் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.