வளர்ந்துக் கொண்டே செல்லும் அதிசய மனிதர்.. வெளிவரும் விநோத பிண்ணனி!!

765

வடக்கு கானாவில்..

உயர்ந்த மனிதனை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை. வழமையான உயரத்தை விட அதிக உயரத்துடன் இருக்கும் சுலேமனா அப்துல் சமேட்டின் பற்றிய ஆச்சரிய பதிவு!

வடக்கு கானாவின் குக்கிராமத்தை சேர்ந்த 29 வயதான சுலேமனா அப்துல் சமேட் என்ற வணிக உரிமையாளர் தான் உலகின் மிக உயரமான மனிதர் என்று கூறப்படுகிறது. அவுச்சே என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகின்றார் சமேட்,

அவருக்கு 22 வயதாக இருந்தபோது ராட்சதத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. வடக்கு கானாவில் உள்ள அவரது உள்ளூர் மருத்துவமனையில் அவரது மாதாந்திர பரிசோதனையின் போது அவர் 9 அடி 6 அங்குலத்தில் அளவிடப்பட்டார்.

இருப்பினும், அவரது மருத்துவமனை அவர்களின் அளவீடு துல்லியமானது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. சுலேமனா தனது 22வது வயதில் அபரிமிதமான உயரத்தை கவனிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறார். இது அவருக்கு உடல்ரீதியாக பல சிக்கலுக்கு தள்ளியது.

தலைநகர் அக்ராவில் தனது சகோதாரருடன் வசித்து வந்தபோது முதுகுத் தண்டு வளைவு பிரச்னை ஏற்படவே, உடல்ரீதியாக பெரும் அவதியுறத் தொடங்கினார். அன்று முதல் அவர் வளைந்த முதுகுத்தண்டுடன் தான் காணப்படுகிறார். உடலின் இணைப்பு திசுக்களை பாதிக்கும் ஒருவகை மரபணு கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இது மிகவும் தீவிரமான சிக்கலாக இதய குறைபாடுகள் வரை உண்டாக்கக்கூடும் என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த அறுவை சிகிச்சை அதிக செலவு ஏற்படும் என்பதால் அவர் இப்படி இருந்து விட்டார்.