நடு வீதியில் தாய்க்கும் 2 வயதுக் குழந்தைக்கும் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

345

கர்நாடகாவில்…

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெங்களூரு நாகவரா பகுதியில் இன்று (ஜனவரி 10) காலை பதிவாகியுள்ளது. தம்பதியரும் அவர்களது இரட்டை குழந்தைகளும் (ஒரு மகள் மற்றும் ஒரு மகன்) பைக்கில் சென்றபோது இரும்புத் தூண் அவர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தாய் தேஜஸ்வானி மற்றும் அவரது மகன் விஹான் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தேஜஸ்வானியின் கணவர் லோஹித் மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லோஹித் பைக்கை ஓட்டி வந்ததாகவும், தேஜஸ்வினி பின்னால் அமர்ந்திருந்ததாகவும், இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உலோக கம்பிகளால் ஆன தூண் சுமார் 40 அடி நீளம் இருந்தது. இந்த சம்பவத்தையடுத்து இரண்டு நாட்களாக வெளிவட்டச் சாலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்துவருகின்றனர்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.